Oct 10, 2025 - 09:17 AM -
0
இன்று (10) சந்திர பகவான் ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று கிரகங்களின் உருவாகும் சுனபா யோகமும், மகாலட்சுமியின் அருளாலும் 12 ராசிளுக்கு நன்மைகள் தரும்.
மேஷ ராசிபலன்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் வேலை தொடர்பான மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு பாதகமாக அமையலாம். அதனால் கவனமாக செயல்படவும். உங்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்துவது நல்லது. இந்த சமூகத்தையும் மரியாதை அதிகரிக்கும். நண்பர்களுடன் நீண்டுதல் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்ப பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பாக கூடுதல் முயற்சிகள் தேவைப்படும். சில நேரங்களில் அது தேவையற்ற சுமையாக கூட அமையலாம். இருக்கணும் உங்கள் கடின உழைப்பிற்காக வெற்றி அடைய வேண்டும். வேலைகள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உங்கள் நிலை மேம்படுத்த புதிய திட்டங்களுடன் செயல்படுவீர்கள். இது உங்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக அமையும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
மிதுன ராசி பலன்
இன்று உங்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான நாளாக அமையும்.. உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை கிடைக்கும். இன்று நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. இன்று வெளியூர் வெளிநாடு தொடர்பான தொழில் செய்யக்கூடிய நபர்களுக்கு புரியாமல் வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் அன்பும் ஆதரவையும் பெறுவீர்கள்.
கடக ராசி பலன்
இன்று உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களைச் சந்திப்பதும் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும். இதன் காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். உங்கள் எதிரிகளின் விமர்சனங்களை நீங்கள் புறக்கணித்து உங்கள் வேலையில் கவனத்தை செலுத்தவும், இது எதிர்காலத்தில் உங்களுக்கு வெற்றியைத் தரும். உங்கள் மனைவியின் ஆலோசனை உங்கள் செல்வத்தைப் பெருக்குவதற்கு ஆதரவாக இருக்கும். இன்று உங்கள் குழந்தை சில பிரச்சனைகளைச் சந்திக்கக்கூடும், எனவே கவனமாக இருங்கள்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று புதிய தெரியாத நபர்களுடன் பண பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம். இது உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும். வணிகம் தொடர்பான பயணங்கள் நன்மை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களின் எதிரிகள் வலுவாக இருப்பார்கள்.. இருப்பினும் உங்களின் புத்திசாலித்தனத்தால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இன்று கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் புதிய சாதனையை படிப்பீர்கள். இன்று உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியவர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி சேர்ந்து அவர்களுக்கு குடும்பத்தினருடன் நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்பீர்கள். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய திருமணம் சார்ந்த முயற்சிகளில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நாளின் முற்பகுதியில் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் வேலைக்கான திட்டமிடலுடன் செயல்படுவது நல்லது. யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும். இது பிரச்சினையை அதிகரிக்கும். உங்கள் பேச்சு மற்றும் செயலில் கட்டுப்பாடு தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு அந்தஸ்து மற்றும் கௌரவம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக அல்லது வேலை தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுக்கு மன அமைதி அதிகரிக்க கூடிய நாள். சில தீர்க்கப்படாத பிரச்சனைகளை முன்னேறுவீர்கள். இன்று உங்களின் நிதி நிலையை மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். இது உங்கள் நிலைமையை மேம்படுத்தும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி சேர்ந்தவர்கள் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். பண பற்றாக்குறை காரணமாக உங்களுக்கு கவலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இன்று மாமியார் வீடு அல்லது உறவினர்கள் மூலமாக கிடைக்கும். இன்று எதிர்பாராத நிதி நன்மைகள் பெற வாய்ப்பு உண்டு.உங்கள் வேலை தொடர்பாக வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். குறிப்பாக வண்டி வாகனம் பயன்பாட்டின் போது கூடுதல் கவனம் தேவை. இன்று உங்கள் நிதி நிலையில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்றைய குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்கள் அல்லது பரிசு வாங்கித் தருவீர்கள். இன்று நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கு சாதகமான நாளாக அமையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவாய்ப்பு கிடைக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு திடீரென சில வழிகளில் நிதி நன்மைகளை பெறுவீர்கள். இதனால் உங்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். திருமண வாழ்க்கை இணக்கமானதாக இருக்கும். இன்று உங்கள் மனைவியின் முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பாக மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தங்கள் மூத்தவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்
கும்ப ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பிரிந்து துணை சேர வாய்ப்பு உண்டு. அவர்களுக்காக பரிசு வாங்குவீர்கள். உங்கள் பெற்றோரிடம் இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்களுடன் பிறந்தவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. எனவே கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
மீன ராசி பலன்
இன்று மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தேர்வுக்கு தயாராக கூடிய நபர்களுக்கு கவனம் அதிகரிக்கும். பரிட்சையில் சிறப்பான வெற்றியை பெறலாம். இன்னும் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இன்றைய கடின உழைப்பு உங்கள் பணியிடத்தில் வெற்றியை அதிகரிக்க கூடியதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு அது தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.