Oct 10, 2025 - 10:21 AM -
0
சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனி மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளதாக வெளியாகும் தகவலால் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மகேந்திர சிங் தோனி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் அவர் ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் தனது உடற்தகுதியை மதிப்பிட்டு, அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பது என அவரது பயணம் தொடர்ந்து வருகிறது.
ஆனால், இந்த வழக்கமான சுழற்சியை உடைக்கும் ஒரு போட்டோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களிலும், கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கே இன்னும் தெளிவான பதில் கிடைக்காத நிலையில், சாதாரண கால்பந்து போட்டிக்கு பிறகு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் தல தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி ஜெர்சியை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி, எண்ணற்ற யூகங்களுக்கு வழிவகுத்தது. தோனி தனது 18 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் அத்தியாயத்தை முடித்துக்கொண்டு, மும்பை அணிக்கு செல்லப்போகிறாரா என்ற விவாதம் ஒருபுறம் கிளம்பியுள்ளது. இது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே பெரும் வார்த்தை போரை உருவாக்கியுள்ளது.