உலகம்
வழக்கு விசாரணையின் போதே நீதிபதி சுட்டுக்கொலை

Oct 10, 2025 - 11:14 AM -

0

வழக்கு விசாரணையின் போதே நீதிபதி சுட்டுக்கொலை

அல்பேனியாவில் தீர்ப்பின் பின்னர் நீதிபதி நீதிமன்றத்திலேயே வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அல்பேனியா நாட்டின் தலைநகர் டிரானாவில் குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார். 

அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். 

ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். 

இதில் நீதிபதி சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்தார். இதனையடுத்து எல்விஸ் ஷ்கெம்பி, நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரி உள்பட 3 பேரை பொலிஸார் கைது செய்தனர். 

நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05