வணிகம்
நவீன வாகனத்துறையில் புதிய அத்தியாயம்: இலங்கையில் DENZA வாகனங்களை அறிமுகப்படுத்தும் JKCG Auto

Oct 10, 2025 - 08:07 PM -

0

நவீன வாகனத்துறையில் புதிய அத்தியாயம்: இலங்கையில் DENZA வாகனங்களை அறிமுகப்படுத்தும் JKCG Auto

இலங்கையின் நிலைபேறான போக்குவரத்துத் துறையில் முன்னணியில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம், சர்வதேச அளவில் பத்தாண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்துடன் கூடிய டென்சா (DENZA) அதிசொகுசு மின்சார வாகனங்களை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. இலங்கையில் டென்சாவின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான இந்நிறுவனம், உயர்தர மாற்று சக்தி வாகனங்கள் (NEV) மூலம், இலங்கை வாகன ஓட்டுநர்களுக்கு நுணுக்கமான நேர்த்தி மற்றும் ஆடம்பரத்தைக் கொண்டு வர உள்ளது. 

டென்சா வாகனங்களுக்கான முன்பதிவுகள், அதன் உத்தியோகபூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே தற்போது ஆரம்பமாகியுள்ளன. அமைதியான ஆடம்பரம் மற்றும் அறிவார்ந்த, உயர்செயல்திறன் கொண்ட புதிய மாற்று சக்தி வாகனங்களைத் (NEV) தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இந்த அறிவிப்பு, இலங்கையின் வாகனத்துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், நிலைபேறான போக்குவரத்து மாற்றத்தை JKCG Auto நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் மற்றுமொரு படியாகவும் அமைகிறது. 

இலங்கையில் டென்சா அறிமுகப்படுத்தும் வாகன வரிசையில், பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட மூன்று தனித்துவமான ஆடம்பர மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. DENZA D9 என்ற சொகுசு மின்சார MPV, குடும்பங்களுக்கான உயர்தர போக்குவரத்து அனுபவத்தை வழங்குகிறது. அதேநேரம், DENZA B8 மற்றும் DENZA B5 ஆகியவை, சாகச ஆர்வமுள்ளோருக்கான plug-in hybrid வாகனமாக, அனைத்தும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

DENZA வாகன வரிசையில் உள்ள ஒவ்வொரு மாதிரியும், சிறந்த உற்பத்தித் தரம், புத்தாக்கத் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட அதிசொகுசு அனுபவம் ஆகியவற்றை வழங்குவதில் இந்நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த முக்கிய பண்புகளே உயர்தர மின்சார மற்றும் plug-in hybrid வாகனங்களை தனித்து அடையாளப்படுத்தும் அடிப்படை அம்சங்களாக திகழ்கின்றன. இந்த நிலையில், DENZA அதிசொகுசு மின்சார வாகனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், BYD இலங்கை சந்தையில் நுழைந்ததிலிருந்து, மிகவிரைவாக நாட்டின் மிகப்பிரபலமான புதிய மாற்று சக்தி வாகன (NEV) நிறுவனமாக மாறியுள்ளது. இது செயல்திறனிலும் ஒட்டுமொத்த வாகன அனுபவத்திலும் நாங்கள் வழங்கும் ஈடுஇணையற்ற மதிப்பை பிரதிபலிக்கிறது. தற்போது DENZA வாகனங்களின் அறிமுகத்துடன், நாங்கள் அந்த வாக்குறுதியை அதிசொகுசு பிரிவுக்கு உயர்த்துகிறோம். சிங்கப்பூர், பிரிட்டன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளுடன் டென்சாவை அறிமுகப்படுத்தும் நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது. இந்த சாதனை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார். 

மேலும், DENZA வாகனங்கள் உலகில் மிகச்சிறந்த உயர்தர புதிய மாற்று சக்தி வாகன அனுபவத்தை வழங்குகின்றன. இவை மேம்படுத்தப்பட்ட இயக்கவியல், புத்திசாலித்தனமான மின்சார செயல்திறன், மற்றும் பயணிகளுக்கு அதிகபட்ச வசதியை வழங்கும் உள்ளறை (Cabin) ஆகியவற்றுடன் முழுமையான தொகுப்பாக விளங்குகின்றன. மேலும், இந்த தனித்துவமான வர்த்தகநாமத்தை எங்களது ஆழ்ந்த பார்வையுள்ள இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், எனக் கூறினார். 

இலங்கை வாடிக்கையாளர்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் Cinnamon Lakeside இல் ஆரம்பமாகும் முன்பதிவின் போது DENZA-வின் அதிநவீன தொழில்நுட்பத்தை நேரடியாக அனுபவிக்க முடியும். அதேபோல, உத்தியோகாபூர்வ தொடக்க விழாவை விரைவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், DENZA நிறுவனம் நிலைபேறான அதிசொகுசு புதிய மாற்று சக்தி வாகனங்களை முன்னேற்றுவதிலும், இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வுகளுக்கான மாற்றத்தை ஆதரிப்பதிலும் டென்சா தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

உலகளாவிய மின்சார வாகனத் துறையில் புரட்சி செய்யும் DENZA நிறுவனம், இலங்கையின் நம்பகமான வர்த்தக குழுமமான John Keells CG Auto நிறுவனத்துடன் கடந்த ஜூன் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இப்புதிய கூட்டாண்மை, DENZA- வின் புதிய மாற்று சக்தி வாகன தொழில்நுட்பத்தையும், இலங்கைச் சந்தையில் John Keells CG Auto நிறுவனத்தின் பலமான சந்தை இருப்பையும் ஒருங்கிணைக்கிறது. 

JKCG Auto நிறுவனம், வாகன உரிமையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க உறுதிபூண்டுள்ளது. இதில் குறிப்பாக, இலங்கை வாடிக்கையாளர்களுக்காக, நுட்பமான காட்சியறைகள், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சேவை நிலையங்கள் மற்றும் எளிதில் கிடைக்கும் உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான 3S தீர்வை இந்நிறுவனம் நிறுவியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05