கிழக்கு
காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது

Oct 12, 2025 - 11:51 AM -

0

காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது

காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பிரிவுகளில் மொத்தம் 25 கிராம் ஐஸ் மற்றும் 310 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் வியாபாரிகளை கடந்த 10 ஆம் திகதி இரவு கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், கடந்த 10 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வியாபாரத்திற்காக போதைப்பொருளை எடுத்துச் சென்ற 33 வயது ஆணொருவரை 10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி பொலிஸார் கைது செய்தனர். 

அதேபோல், மற்றொரு தகவலின் அடிப்படையில் ஏறாவூர் பிரதேசத்தில் 15 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவரை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். 

மட்டக்களப்பு பகுதியில், விகாரை ஒன்றில் தங்கியிருந்து கல்லடி பாலம் அருகில் கடலை வண்டியில் வியாபாரம் செய்து வந்த கடுகன்னாவைச் சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவரை 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்தனர். 

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அதே விகாரையில் தங்கி வீடுகளில் சரிந்து வளர்ந்த தென்னைமரங்களை இரும்புக்கம்பி கேபிள் இழுத்து கட்டும் வேலை செய்து வந்த அல்பிட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரை 170 மில்லிகிராம் ஹெரோயின் உடன் கைது செய்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05