Oct 12, 2025 - 11:52 AM -
0
இலங்கையின் டிஜிட்டல் பயணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை பூர்த்தி செய்து, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய AI Expo மற்றும் மாநாடு 2025 அண்மையில் சிறப்பாக நிறைவுற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 12,000 க்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றதுடன், 50க்கும் அதிகமான பேச்சாளர்களைக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வில், 35 க்கும் அதிகமான கண்காட்சியாளர்களின் நவீன புத்தாக்க தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், 11 குழுநிலை கலந்துரையாடல்கள் மற்றும் 44 சிந்தனை தலைவர்களின் அமர்வுகள் அடங்கியிருந்தன.
10க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்தனர். தேசத்தின் AI பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக மாத்திரம் இந்த நிகழ்வு அமைந்திராமல், தொழில்னுட்ப புத்தாக்கம், கைகோர்ப்பு மற்றும் எதிர்காலத்துக்கு தயாரான தீர்வுகள் போன்றவற்றுக்கான வளர்ந்து வரும் மையமாக இலங்கையை திகழச் செய்யும் களத்தையும் ஏற்படுத்தியிருந்தது.