Oct 12, 2025 - 12:08 PM -
0
இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான CavinKare, தனது பிரதான புதுமை வர்த்தக நாமமான Cavin’s Milkshake ஐ இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா, நேபாளம், மாலைதீவு, அவுஸ்திரேலியா, பூட்டான், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசிக்கும் 6 முதல் 60 வரையுள்ள நுகர்வோரால் மிகவும் விரும்பப்படும் இந்தியாவின் முதல் தர “மிட்-மீல் ஸ்நாக்” இப்போது இலங்கையிலும் கிடைக்கிறது. இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கையில் அதி வேகமாக வளர்ந்து வரும் Milkshake சந்தையில் மிகப்பெரிய அளவில் பிரவேசிக்கும் முதல் பாரிய நிறுவனமாக CavinKare தனது வர்த்தக நாமத்தை உறுதிப்படுத்துகின்றது.
தூய பசும் பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் Cavin’s Milkshake சர்வதேச தரநிலைகளுக்கு உறுதிப்படுத்தப்படுவதுடன், அடர்த்தியான, க்ரீமியான மற்றும் சுவையான பானமாக திகழ்கிறது. 9 மாதங்கள் வரை பயன்பாட்டு உத்தரவாதத்துடன் கிடைக்கும் Cavins Milkshake ஆரோக்கியமான “மிட்-மீல்” பானத் தேவைக்கு சரியான தீர்வாகும்.
இலங்கை நுகர்வோரின் சுவை விருப்பங்களுக்கு ஏற்ப, பெல்ஜியன் சொக்லேட், ஸ்ட்ரோபெரி, வெனிலா, கோப்பி ஷேக் (Coffee Shake), ப்ரீமியம் மோல்ட் ஆகிய 5 சுவைகளில் Cavin’s Milkshake இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. CavinKare, சர்வதேச வணிக பிரிவு துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் திரு. ராஜா வரதராஜு குறிப்பிடுகையில் “இந்தியாவின் முதல் தர மிட்-மீல் ஸ்நாக் வர்த்தக நாமமான Cavin’s Milkshake ஐ இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமகிழ்சியடைகின்றோம். இது எங்கள் உணவு மற்றும் பானத் துறையில் முக்கியமான அடித்தளமாக அமைவதுடன் நாம் பிராந்தியத்தில் மேட்கொள்ளும் முதலீட்டு முயற்றசிகளை மேலும் பிரதிபலிக்ககின்றது. தனிநபர் பராமரிப்பு பிரிவில் வலுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நாம் இலங்கையில் Cavin’s Milkshake அறிமுகத்துடன் வேகமாக வளரும் பான சந்தையின் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் அதி-நவீன உற்பத்தி நிலையம் ஒன்றை ஸ்தாபித்து, உள்ளூர் சுவைக்கு ஏற்ப சுவையான, சத்தான தயாரிப்புகளை வழங்கவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.”
Cavin’s Milkshake உலக தரம் பெற்ற டெட்ரா பாக் பெக்கேஜிங்கில் கிடைக்கப்பெறுவதுடன், இதன் மூலம் புத்துணர்ச்சி, பாதுகாப்பு, வசதி ஆகியன உறுதிசெய்யப்படுகின்றன. இலங்கையின் முக்கிய நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், தனிக் கடைகள், பிரீமியம் மளிகைக் கடைகள் மற்றும் முன்னணி e- வணிக தளங்களில் நுகர்வோர்களுக்கு Cavin’s Milkshake தயாரிப்புகளை பெற்று கொள்ள முடியும்.
இலங்கைக்கு Cavin’s Milkshake அறிமுகத்தின் மூலம், Cavin’s தனது சர்வதேச நாமத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், இலங்கை நுகர்வோருக்கு தரமான பால் அடிப்படையிலான பான அனுபவத்தை வழங்குகிறது.