Oct 12, 2025 - 01:51 PM -
0
போதைப்பொருள் கட்டுப்படுத்தலில் கடற்படை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை மட்டுமே செய்யமுடியும் என சுட்டிக்காட்டிய இலங்கை கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் புத்திக லியனகமகே பொதுமக்களது பங்களிப்பும் எமக்கு கிடைக்கப் பெற்றால் முழுமையான இலக்கை எட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.
கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்தில் இன்று (12) மேற்கொண்ட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கடல் மார்க்கமாக போதைபொருள் கடத்தல் இடம்பெற்றுவருவது குறித்து நாம் அதிக அக்கறை செலுத்தி மேற்கொண்ட முயற்சிகளால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னுன் பல நூறு கிலோ போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. குறித்த குற்றத்துடன் தொடர்புடைய பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டும் உள்ளனர்.
இதே நேரம் கடற்படை ஒரு பிரதேசத்துக்கானதல்ல. அது நாடு முழுவதுக்குமான ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பு.
இலங்கைத் தீவின் அனைத்து கடற்பரப்பினதும் பாதுகாப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை நாம் முடியுமானவரை திறன்பட செய்துவருகின்றோம்.
கடற்படைக்கு உள் நாடு புலனாய்வு கட்டமைப்பின் தகவல் மடுமல்லாது சர்வதேச புலன் தகவல்களும் கிடைக்கப்பெற்று துரித நடவடிக்கை எடுக்கின்றது. ஆனாலும் எமக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் அவசியம்.
அந்தவகையில் எமக்கு கிடைக்கின்ற தகவல்களுடன் மக்களாகிய நீங்களும் தகவல்களை வழங்கி குறித்த செயலில் ஈடுபடும் தரப்பையும் அவர்களது கட்டமைப்பையும் இல்லாதொழித்து போதைப்பொருள் அபாயத்திலிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
--

