ஏனையவை
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

Oct 12, 2025 - 02:14 PM -

0

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஆராச்சிக்கட்டுவ - பண்டாஹேன பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 396 கிராம் ஐஸ் போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதுடையவர் எனவும் அவர் கொழும்பு - மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05