விளையாட்டு
உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

Oct 13, 2025 - 09:49 AM -

0

உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

13 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் இடம்பெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 

விசாகப்பட்டினத்தில் நடந்த 13 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்கள் குவித்தது. இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ஓட்டங்கள் எடுத்தார். 

இந்நிலையில் 331 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவரில் 7 விக்கெட்டுகளையும் இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் 1,000 ஓட்டங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனை படைத்துள்ளார். 

நடப்பு ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 1,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார் .

Comments
0

MOST READ
01
02
03
04
05