வணிகம்
ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் முதலாவது e-வணிக வர்த்தக நாமமான ‘Hair Buddy’ ஐ அறிமுகம் செய்வதற்காக Oproma Cosmetics உடன் கைகோர்ப்பு

Oct 13, 2025 - 03:56 PM -

0

ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் முதலாவது e-வணிக வர்த்தக நாமமான ‘Hair Buddy’ ஐ அறிமுகம் செய்வதற்காக Oproma Cosmetics உடன் கைகோர்ப்பு

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி மருந்துப் பொருட்கள் விநியோகத்தருமான ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் (பிரைவட்) லிமிடெட், தனது பிந்திய கூந்தல் பராமரிப்பு தயாரிப்பான Hair Buddy ஐ அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. Oproma Cosmetics Pvt Ltd உடன் இணைந்து தாவரவியல் இணை கலவை கூந்தல் மாஸ்க் ஆக வடிவமைக்கப்பட்டுள்ள Hair Buddy, ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் நிறுவனத்தின் முதலாவது நுகர்வோருக்கு நேரடியான, முதன்மை டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. 

NMRA இனால் அனுமதியளிக்கப்பட்ட மற்றும் சருமவியல் ரீதியில் பரிசோதிக்கப்பட்டு, 100% BPA அற்றது என உறுதி செய்யப்பட்ட Hair Buddy, வெளிப்பார்வைக்கு புலப்படும் வளர்ச்சியை பெற்றுக் கொடுப்பதற்காக துரிதமாக செயலாற்றுகிறது. “என்றென்றும் நண்பர்’ ஆக திகழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Hair Buddy, கூந்தல் உதிர்வை தவிர்ப்பது, பொடுகை குறைப்பது மற்றும் கூந்தல் வேர் முதல் நுனி வரை வலிமைப்படுத்தும் வகையில் செயலாற்றும். ஆழமான செழுமையூட்டல் ஊடாக நீண்ட கால சிகை சுகாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் Hair Buddy அமைந்துள்ளது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், Hair Buddy இன் “என்றென்றும் நண்பர்’ எனும் கோட்பாட்டினூடாக பாதுகாப்பான, உள்ளடக்கமான மற்றும் வினைத்திறனான சிகை வளர்ச்சி பங்காளராக திகழும் வகையில் அமைந்துள்ளது. தாவரங்களினால் வலுவூட்டப்பட்ட சேர்மானங்களைக் கொண்டு இலங்கையின் பாரம்பரியத்துக்கமைய உறுதி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

வேகமாக விரிவடைந்து வரும் கூந்தல் பராமரிப்பு சந்தையில் பிரவேசிப்பதன் மூலம் வளர்ச்சியை உந்துவது எனும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் நிறுவனத்தின் பிரதான கருப்பொருளுடன் பொருந்துவதாக Hair Buddy இன் அறிமுகம் அமைந்துள்ளது. Hair Buddy இன் அறிமுகத்தினூடாக, தனிப்பட்ட பராமரிப்பில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் காண்பிக்கும் பன்முகத்தன்மை மற்றும் நாடளாவிய ரீதியில் சௌகரியமான e-வணிக விநியோக கட்டமைப்பை வழங்கும் டிஜிட்டல் மாற்றியமைப்பு நிகழ்ச்சி நிரல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தச் அண்மைய மைல்கல்லுக்கு மையமாக, ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் நிறுவனத்தின் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட கால விநியோகப் பங்குதாரரான சந்திரசிறி அண்ட் சன்ஸ் (Chandrasiri & Sons), Hair Buddy தயாரிப்புக்கான பிரத்தியேக விநியோகஸ்தர்களாக செயலாற்றும். பல ஆண்டு கால கூட்டுறவைக் கொண்டுள்ள இந்நிறுவனங்களின் இணைந்த செயற்பாட்டினூடாக, புதிய சந்தைகள் மற்றும் நுகர்வோர் பிரிவுகளை ஆராயும் நிலையில், நம்பகமான உறவுகளை உருவாக்குவதில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

அறிமுகம் தொடர்பில், ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. மஹேஷ ரணசோம கருத்துத் தெரிவி்க்கையில், “புதிய சந்தைகளுக்கும், சுகாதார பராமரிப்பு பிரிவுகளுக்கும் நாம் விரிவாக்கம் செய்யும் நிலையில், நீண்ட கால மற்றும் நம்பிக்கையை வென்ற பங்காண்மைகளை புதுப்பிப்பது மட்டுமன்றி, பொறுப்பு வாய்ந்த வகையிலும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கங்கள் எதுவுமற்ற தயாரிப்பை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதையிட்டும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், Hair Buddy இனால் புத்தாக்கம், நோக்கம் மற்றும் நிலைபேறான பொறுப்புணர்வு ஆகியவற்றில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் காண்பிக்கும் நோக்கு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. Hair Buddy ஊடாக ஹோமஸ் பார்மசியுட்டிகல்ஸ் சுகாதார பராமரிப்பு என்பதற்கு அப்பால் சென்று, தனிப்பட்ட நலன்பேணல் என்பதில் காலடி பதித்துள்ளது.” என்றார். 

Oproma Cosmetics இன் முகாமைத்துவ பணிப்பாளர் பிரதீப் மாபலாகம கருத்துத் தெரிவி்க்கையில், “Hair Buddy அறிமுகத்துடன், வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் கவனமான முறையில் அமைந்த நீண்ட கால கூந்தல் பராமரிப்பை உறுதி செய்யும் தயாரிப்பை வழங்கி, வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்ய எதிர்பார்க்கிறோம். ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் உடன் கைகோர்த்துள்ளமையினூடாக, இந்த நோக்கத்தை செயற்படுத்துவது மாத்திரமன்றி, இரு நிறுவனங்களும் கொண்டுள்ள பொறுப்புணர்வு மற்றும் புத்தாக்கம் ஆகிய பெறுமதிகளுடன் பொருந்துவதாகவும் அமைந்துள்ளது.” என்றார். 

முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான சிகையை பராமரிப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிரந்தர உதவியாளரை வழங்கும் இலக்குடன், Hair Buddy அறிமுகமாகியுள்ளது. இது, நம்பகமான புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் மக்கள் சிறப்பாக வாழ வழிவகுக்கும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05