வணிகம்
துணி காயவைக்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: Samsung அறிமுகப்படுத்தும் Bespoke AI சலவை இயந்திரம்

Oct 13, 2025 - 04:37 PM -

0

துணி காயவைக்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: Samsung அறிமுகப்படுத்தும் Bespoke AI சலவை இயந்திரம்

இலங்கையின் முன்னணி நுகர்வோர் மின்னணு வர்த்தகநாமமான Samsung, அறிவுசார் தொழில்நுட்பமும் அழகிய வடிவமைப்பும் கொண்ட Bespoke AI Washer Dryer சலவை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த காலநிலையிலும் துணிகளை சலவை செய்து உலர்த்தும் செயல்முறையை எளிமையாக்கி, நவீன நகர்ப்புற வீடுகளுக்கு ஏற்ற முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நவீன சாதனம் துணியை சலவை செய்வது மற்றும் உலர்த்துவது ஆகிய இரண்டு செயல்பாடுகளையும் ஒரே நேரத்தில் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துவைத்த துணிகளை வேறொரு சாதனத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமின்றி, அதே சாதனத்திலேயே உலர்த்தும் வசதியைக் கொண்டுள்ளது. இடநெருக்கடி உள்ள நகர்ப்புற வீடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம், இரண்டு தனித்தனி இயந்திரங்களுக்கான தேவையை நீக்கி, துணி சலவை செயல்முறையை எளிமையாக்குகிறது. 

இந்த கவர்ச்சிகரமான சாதனம் வெளித்தோற்றத்திற்கு அப்பால், விசாலமான கொள்ளளவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் கொண்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான துணிச்சுமைகளை எளிதாக கையாளமுடிவதுடன், பயனாளர்களின் சலவை தொடர்பான முடிவுகளையும் எளிமைப்படுத்தி, துணி சலவை செய்யும் அனுபவத்தை முழுமையாக மாற்றியமைக்கிறது. 

இந்த சாதன வரிசை, வசதி, திறன் மற்றும் நாகரிக வடிவமைப்பு ஆகியவற்றை சமநிலையில் வைத்திருக்கும் மின் உபகரணங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இது வெறுமனே சுத்தமான மற்றும் புதிய ஆடைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நவீன, புத்திசாலித்தனமான வாழ்க்கை முறைக்கான புதிய பாதையையும் வழங்குகிறது. இது நகர்ப்புற வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு இடையே, தரமான வாழ்க்கையை அனுபவிக்க உதவும் முன்னோடித் தொழில்நுட்பமாக திகழ்கிறது. 

Samsung இன் அறிவுசார் அம்சங்களால் வடிவமைக்கப்பட்ட இந்த Washer Dryer, அன்றாட துணி சலவை செயல்முறையை மிகவும் எளிமையாக்கியுள்ளது. AI EcoBubble™ தொழில்நுட்பம் சலவைத் தூளின் ஊடுருவலை மேம்படுத்தி, சிறந்த சலவை முடிவுகளை வழங்குகிறது. இந்த அம்சங்கள் ஒன்றிணைந்து, நேரத்தை மிச்சப்படுத்தி, முயற்சியைக் குறைத்து, குடும்பங்களுக்கு அதிக ஓய்வு நேரத்தை உருவாக்குகின்றன. மேலும், SmartThings செயலி மூலம் மின் நுகர்வு கண்காணிக்கப்பட்டு சிறந்த சலவை சுழற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இயந்திரத்தின் Digital Inverter தொழில்நுட்பம், துணிச்சுமைக்கு ஏற்ப துல்லியமான செயல்பாடுகளைப் பயன்படுத்தி இயக்கச் செலவுகளைக் குறைத்து அமைதியாகவும், சீராகவும் இயங்க உதவுகிறது. 

தட்டையான கண்ணாடி முடிப்பு, எளிமையான வளைவுகள் மற்றும் உயர்தர கருப்பு Bespoke அழகிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த Washer Dryer, வெறும் செயல்பாட்டிற்கு மட்டுமல்ல, வீட்டின் அழகியலை மேம்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய பெரிய இயந்திரங்களைப் போலல்லாமல், இது சிறிய வீடுகளில் எளிதாக இணைந்துவிடும் தன்மை கொண்டது. மின் உபகரணங்களை அலங்கார பொருளாக கருதும் நவீன குடும்பங்களுக்கு ஏற்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் சிறிய அளவிலான வடிவமைப்பினை கொண்டிருந்தாலும், இந்த சாதனம் 12 கிலோ துவைப்பு மற்றும் 7 கிலோ உலர்த்தும் கொள்ளளவை வழங்குகிறது. இதனால் போர்வைகள், புடவைகள் மற்றும் திரைச்சீலைகள் போன்ற பெரிய துணிகளை ஒரே முறையில் சலவை செய்ய முடிகிறது. குறைந்த சலவை சுழற்சிகள் தேவைப்படுவதால், துணி சலவைக்கு செலவிடும் நேரமும் குறைகிறது. மேலும், இந்த Washer Dryer மாதிரி 7 கிலோ மாதிரிக்கு சமமான இடத்தை மட்டுமே பிடிக்கும் என்பதால், வீட்டின் இடத்தை மேலும் திறம்பட பயன்படுத்த உதவுகிறது. 

இடம் அருமையாகவும் வடிவமைப்பு முக்கியமாகவும் கருதப்படும் நவீன கால சிறிய வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த Washer Dryer, இரண்டு பணிகளை ஒரே சாதனத்தில் செய்து இடத்தைச் சேமிக்கிறது. மாடியில் துணி காய வைக்கும் கயிறுகளின் தேவையை நீக்கி, நவீன உள்ளலங்காரத்துடன் இயல்பாக இணைந்து, மாடியின் அழகியலை மீட்டெடுக்க உதவுகிறது. 

மிருதுவான துணிவகைகள், ஒருமுறை மட்டும் அணிந்த உடைகள் அல்லது புத்துணர்ச்சி தேவைப்படும் ஆடைகளுக்கு ஏற்ற வகையில், Air Wash அம்சம் அமைந்துள்ளது. இது தண்ணீரோ கடும் இரசாயனங்களோ இல்லாமல் வெறும் சூடான காற்றைக் கொண்டு 99.9% பாக்டீரியாக்களை அகற்றி, துர்நாற்றத்தையும் நீக்குகிறது. குழந்தைகளின் ஆடைகளையும் Hygienic Steam தொழில்நுட்பத்தின் மூலம் 20 நிமிடங்களில் பாதுகாப்பாக சுத்தம் செய்யமுடியும். எனவே, Bespoke AI Washer Dryer வெறும் துணி துவைத்தலுக்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு துணியும் அதற்கேற்ற சிறப்பு கவனிப்புடன் பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. 

Samsung நிறுவனம் மட்டுமே Digital Inverter மோட்டாருக்கு 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. WD12D மாதிரி இலங்கை முழுவதும் உள்ள Singer, Singhagiri, Damro மற்றும் Softlogic ஆகிய விநியோகஸ்தர்களிடம் 229,999 ரூபா என்ற சிறப்பு விலையில் தற்போது கிடைக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05