உலகம்
காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8 ஆவது போராகும்!

Oct 13, 2025 - 04:38 PM -

0

காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8 ஆவது போராகும்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். 

ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து, அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். 

இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார். 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 

"போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நடப்பதாக கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8 ஆவது போராகும்" என தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05