செய்திகள்
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

Oct 13, 2025 - 04:44 PM -

0

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகாவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) காலை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவால் அவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

 

எல். குமுது லால் போகாவத்த நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றி வந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதியால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்படி, நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க நியமிக்கப்பட்டார்.

 

 அதன்படி, இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05