செய்திகள்
இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி - டிரம்ப்

Oct 13, 2025 - 04:56 PM -

0

இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி - டிரம்ப்

இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

 

இஸ்ரேல் பாராளுமன்றில் சற்றுமுன் உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப் இதனை தெரிவித்தார்.

 

காசா போரில் இஸ்ரேலின் ஆதிக்கமே போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது என தெரிவித்த டிரம்ப், இதோடு சேர்த்து 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

“போர் நிறுத்தத்தால் காசாவுக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. இனி வரும் தலைமுறைகளுக்கு இது பொற்காலமாக இருக்கும், அமெரிக்காவை போலவே இஸ்ரேலிலும் பொற்காலம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு போரின் முடிவு மட்டுமல்ல.. பயங்கரவாதத்தின் முடிவு, மத்திய கிழக்கின் வரலாற்றில் ஒரு புதிய விடியல் ஏற்பட்டுள்ளது. 8 போர்களை நிறுத்தியதாக பெருமையாகவே சொல்வேன். ரஷ்யா உக்ரைன் போரில் வாரம் 7,000 வீரர்கள் இறக்கின்றனர். புதினை சந்தித்து பேசி போரை நிறுத்த விரும்பினேன். போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் செவி சாய்க்கவில்லை'' என்றார்.

 

இதேவேளை, காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததற்காகவும், இஸ்ரேலுக்கு நீண்டகாலமாக அளித்து வரும் ஆதரவிற்காகவும் டிரம்ப் இஸ்ரேலின் மிக உயர்ந்த சிவில் கௌரவத்தைப் பெறுவார் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05