Oct 13, 2025 - 05:30 PM -
0
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்குதலால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.