Oct 14, 2025 - 10:21 AM -
0
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் இன்று (14) முடிவடைகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு 121 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) 4 ஆவது ஆட்ட நேர முடிவில் இந்தியா 63 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 58 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் சிராஜ் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டும் 2 ஆவது டெஸ்டில் 3 விக்கெட்டும் வீழ்த்தி இந்த ஆண்டில் 8 போட்டிகளில் விளையாடிய சிராஜ் 38 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.
இதன்மூலம் இந்த ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரானார். இவருக்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த முசரபானி 36 விக்கெட்டுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.
அதனை தொடர்ந்து ஸ்டார்க் (29), நாதன் லயன் (24), ஜோமல் வாரிகன் (23) என அதற்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.