Oct 14, 2025 - 01:31 PM -
0
ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் நெலு மலர்களைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள், பூங்காவில் அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய செயல்பட வேண்டுமென ஹோர்டன் சமவெளி தேசியப் பூங்காவின் பிரதான பாதுகாப்பு முகாமையாளர் சிசிர ரத்நாயக்க தெரிவித்தார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை நான்கு வகையான மலர்கள் ஒரே நேரத்தில் பூத்துள்ளதாகவும், வார இறுதி நாட்களில் அவற்றைப் பார்வையிட அதிகளவு பார்வையாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும், தேசியப் பூங்காவிற்கு வரும் குழுக்கள் பூங்காவின் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்டால், அந்தக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
--