மலையகம்
போக்குவரத்திற்கு அனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

Oct 14, 2025 - 01:51 PM -

0

போக்குவரத்திற்கு அனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

ஹட்டன் நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியின் ஊடாக நுவரெலியா செல்லும் பாதையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற பஸ் விபத்தின் காரணமாக அப்பகுதிக்கான பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக 5km தூரம் இந்த பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நடந்து செல்வதால் பெரும் அசௌகரிய நிலைமைக்கு முகம் கொடுக்கின்றனர். 

இந்த பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் காலையில் அனைவரும் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் உடனடியாக அரசாங்கம் இந்த வீதியில் பஸ் போக்குவரத்து சேவையை மீண்டும் வழங்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று (14) காலை 9 மணிக்கு ரதல்ல வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பரீட்சைக்கு செல்லும் மாணவர்களின் நேரத்தை வீணாக்காதே, வயோதிபர்களின் சாபத்தை சம்பாதிக்காதே, போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05