வணிகம்
கொமர்ஷல் வங்கியின் நிலைபெறுதகு தன்மைக்கான தலைமைத்துவம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. உலகளாவிய உடன்படிக்கையின் வருடாந்த அமர்வுகளுக்கு உத்வேகம் அளித்தது

Oct 14, 2025 - 05:12 PM -

0

கொமர்ஷல் வங்கியின் நிலைபெறுதகு தன்மைக்கான தலைமைத்துவம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. உலகளாவிய உடன்படிக்கையின் வருடாந்த அமர்வுகளுக்கு உத்வேகம் அளித்தது

கொமர்ஷல் வங்கியின் பெருநிறுவன வங்கிப்பிரிவின் பிரதிப்பொது முகாமையாளர் திரு. ஹஸ்ரத் முனசிங்க நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) வருடாந்த அமர்வுகளுடன் இணைந்து நடத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் உலகளாவிய உடன்படிக்கை (UNGC) வருடாந்த அமர்வினில் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதையடுத்து இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் நிலைபெறுதகு தன்மைக்கான தலைமைத்துவம் உலக அரங்கில் வெளிப்படையாகக் கவனத்தை ஈர்த்தது. இக்கூட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 69 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியத்தின் (CSR Trust) அறங்காவலராகப் பணியாற்றும் திரு. முனசிங்க, வங்கியின் நிறைவேற்று நிலைபெறுதகு தன்மைக்கான குழுவின் அங்கத்தவராகவும், இலங்கையில் உள்ள UNGC வலையமைப்பின் சபை ப்பணிப்பாளராகவும் உள்ளார். அவர், 14 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆசியா மற்றும் ஓசியானியா தலைமைத்துவ வட்ட மேசை மேடையில், இலங்கையின் நிலைபெறுதகுதன்மைச் சூழல் குறித்து உரையாற்றினார். 

தமது உரையில் திரு. முனசிங்க, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை உலகளாவிய நிலைபெறுதகு தன்மையை முன்னேற்றுவதில் முக்கிய பங்கை வகிக்கும் ஓர் உயிர்ப்பல்வகைமை வள மையம் (biodiversity hotspot) எனக் குறிப்பிட்டார். இப்பகுதியின் மிகுந்த வளங்கள்—முக்கியமாக மனித மூலதனம், நிலைபெறுதகு தன்மை சார்ந்த பத்திரங்கள், காலநிலை மாற்றம், உயிரியல் பல்வகைமை, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்பத் திட்டங்கள், பன்முகத்தன்மை மற்றும் பாலினம்சார் திட்டங்களில் முதலீட்டிற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இதற்கிணங்க, கொமர்ஷல் வங்கியானது நிலைபெறுதகு தன்மையை அதன் முக்கிய செயல்பாடுகளில் ஒருங்கிணைத்து, அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் முன்னுரிமை அளித்து, பொறுப்பான வங்கி நடைமுறைகள் மற்றும் புதிய முன்முயற்சிகள் மூலம் துறையில் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் அவர் வலுசக்தி நிலைமாற்றத்திற்கான காலநிலை நிதியளிப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பாலின சமத்துவத்திற்கான அறிவார்ந்த நிதியளிப்பு போன்ற விசேட நிதியளிப்பு வாய்ப்புகள் குறித்தும் குறிப்பிட்டார். 

இந்த அமர்வுகளுக்குப் பின்னர், UNGC இலங்கை வலையமைப்பு வெளியிட்ட ஊடகச் செய்தியில், ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய உடன்பாடு மையத்தின் நியூயோர்க்கில் நடைபெற்ற ஆசியா மற்றும் ஓசியானியா தலைமைத்துவ வட்டமேசை – தந்திரோபாயம், கொள்கை மற்றும் தாக்கம் கூட்டத்தில், திரு. முனசிங்க இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியத்தைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைந்தோம் என்று கூறப்பட்டுள்ளது. 

அதில் மேலும், இந்த உயர்மட்ட உரையாடல், நிலைபெறுதகு தன்மைத் தலைமைத்துவத்தின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்ய, பிராந்தியத்தின் முன்னோடியான பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (CEOs) மற்றும் குடிசார் சமூக நிறுவனத் தலைவர்கள் (CSOs) ஆகியோரை ஒருங்கிணைத்தது. இந்த உரையாடல்கள் நேர்மையானதும், சிந்தனையைத் தூண்டும் தன்மையுடனும், செயல்முகமாகவும் இருந்து, விதிமுறைகளுக்கான இணக்கத்திலிருந்து, கூட்டாக உருவெடுப்பதற்கான மாற்றத்தை வலியுறுத்தின. இதில், நிலைபெறுதகு தன்மை இனி ஒரு கடமையாகச் செய்யும் நடைமுறையல்ல அது ஒரு முக்கியமான திட்ட மற்றும் வளர்ச்சி இயக்கியாக உள்ளது, எனவும் தெரிவித்துள்ளது. பல்வேறு சந்தைகளில் புத்தாக்கமும் ஒத்துழைப்பும் தீர்வுகளுக்கு வழி வகுத்து வரும் நிலையில், ஒரு செய்தி வலுவாக எதிரொலித்தது: ஆசியா மற்றும் ஓசியானியா நாடுகள் உலகளாவிய நிலைத்தன்மைப் போக்குகளுக்கு பதிலளிப்பது மட்டுமல்ல அவற்றை வடிவமைக்கவும் செய்கின்றன என்று UNGC தெரிவித்துள்ளது. 

திரு. முனசிங்க, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தலைமையில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நா. SDG Moment மேடையில் பங்கேற்றார். இந்நிகழ்வில், பெல்ஜியத்தின் மகாராணி மநில்டே அயர்லாந்து பிரதமர் மைக்கல் மார்ட்டின் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் உரையாற்றினர். 

ஒரு வார கால ஐ.நா. அமர்வுகளில், திரு. முனசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பல உயர்மட்ட பிரதிநிதிகளையும் ஐ.நா.வுடன் இணைந்த நிறுவனங்களையும் சந்தித்து, வங்கியின் உலகளாவிய நிலைபெறுதகு தன்மை நிகழ்ச்சி நிரலுடனான தொடர்புகளை வலுப்படுத்தினார். இவர்களில் UNGC இன் உதவி பொதுச் செயலாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி சாண்டா ஓஜியாம்போ மற்றும் PRI இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. டேவிட் அட்கின் ஆகியோர் அடங்குவர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05