Oct 14, 2025 - 06:25 PM -
0
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ஓட்டங்கள் பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
109 ஓட்டங்கள் முன்னிலையில் 2 ஆவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 167 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாடு வம்சாவளியை சேர்ந்த சேனுரான் முத்துசாமி அசத்தியுள்ளார்.