Oct 15, 2025 - 07:50 AM -
0
ஈக்வடாரின் மிகப்பெரிய நகரமான குவாயாகுவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகே கார் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதற்கட்ட தகவல்களின்படி, நேற்று (14) இரவு பல்பொருள் அங்காடிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்த போது திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது.
அவசரகால அதிகாரிகள் ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய நிலையில், இந்த வெடிப்பு கார் குண்டுவெடிப்பால் ஏற்பட்டதாகத் தெரிகிறது என்றும் தெரிவித்தனர்.
உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி, அருகில் இருந்த வாடகை சாரதி உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும், அதிகாரிகள் சரியான உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை. மேலும் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.