உலகம்
2026 இல் 3 ஆம் உலகப் போர் மூளும்?

Oct 15, 2025 - 12:20 PM -

0

2026 இல் 3 ஆம் உலகப் போர் மூளும்?

2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தக போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026-ல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள். 

ஆனால், பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன. 

பாபா வங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப் பொருளாகி வருகிறது. 

பாபா வங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம். 

உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும். 

பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம். 

இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வங்கா எச்சரித்துள்ளார். அவர் கூறிய இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர்.

Comments
0

MOST READ