ஏனையவை
துறைநீலாவணை மகா வித்தியாலயத்திற்கு முதலிடம்...

Oct 15, 2025 - 05:20 PM -

0

துறைநீலாவணை மகா வித்தியாலயத்திற்கு முதலிடம்...

அரச சிறுவர் ஓவிய விழா தேசிய மட்ட சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 

புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக் கழகத்தின் அரச கட்புலக் கலை குழு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச சிறுவர் ஓவிய விழாவின் முதல் சுற்றில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முதன்முறையாக 17 மாணவர்கள் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஓவியப் பயிற்சி மற்றும் வழிகாட்டல்களை தேசிய கலைஞரும், ஓவிய ஆசிரியருமான கலைஞர் ஏ.ஓ. அனல் வழங்கியிருந்தார். 

இம்மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட தேசிய மட்ட ஓவியப் பயிற்சி பட்டறை மற்றும் ஓவியப் போட்டியானது மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நேற்று (14) காலை 9 மணி முதல் பி.ப 1 மணி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05