வணிகம்
இலங்கையின் அதிகளவு விரும்பப்படும் தொலைத்தொடர்பாடல் சேவை வர்த்தக நாமமாக SLT-MOBITEL கௌரவிப்பைப் பெற்றது

Oct 15, 2025 - 05:31 PM -

0

இலங்கையின் அதிகளவு விரும்பப்படும் தொலைத்தொடர்பாடல் சேவை வர்த்தக நாமமாக SLT-MOBITEL கௌரவிப்பைப் பெற்றது

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, இலங்கையின் முதல் தர தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் எனும் நிலையை பெற்றுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்திற்குரிய PepperCube Tracker இல் இந்த கௌரவிப்பைப் பெற்றுள்ளது. 

இந்தத் தரப்படுத்தலினூடாக, இலங்கையின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமம் எனும் SLT-MOBITEL இன் நிலை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமது வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், SLT-MOBITEL இன் பரந்த, தங்கியிருக்கக்கூடிய தொடர்பாடல் சேவைகளில் இலங்கையின் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள தெரிவு மற்றும் நம்பிக்கை போன்றவற்றை பிரதிபலிப்பதாகவும் இந்த சாதனை அமைந்துள்ளது. 

புத்தாக்கமான, உயர் தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குவதற்கான வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் நாடு முழுவதிலும் தெரிவுக்குரிய வர்த்தக நாமம் எனும் கீர்த்தி நாமத்தையும் மேலும் உறுதி செய்வதாக இந்த மைல்கல் சாதனை அமைந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05