Oct 15, 2025 - 08:10 PM -
0
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான 48 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று அமுலாகியுள்ளது.
இன்று (15) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு இந்த போர் நிறுத்த உடன்படிக்கை அமுலாவதாக இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானும் தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானும் புதிய எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ளதால் பாரிய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் "சிக்கலான ஆனால் தீர்க்கக்கூடிய பிரச்சினையாகும் அதற்கான தீர்வைப் பெற இரு நாடுகளும் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்த உறுதிபூண்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.