Oct 16, 2025 - 12:48 PM -
0
2025 ஆம் ஆண்டுக்கான மிச்செலின் சிறப்பு விருதுகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள மிகச் சிறந்த ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் சிறப்புமிக்க விருதிற்காக, ரெஸ்பிளெண்டட் சிலோன் [Resplendent Ceylon] நிறுவனத்தின் மூன்று ஹோட்டல்களும் தெற்காசிய பிராந்தியத்தில் பின்வரும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க 3 மிச்செலின் கீ[Michelin Key] சிறப்புடன் Ceylon Tea Trails, 2 மிச்செலின் கீ சிறப்புடன் Wild Coast Tented Lodge மற்றும் 1 மிச்செலின் கீ சிறப்புடன் Cape Weligama. Ceylon Tea Trails ஆனது இலங்கையில் மதிப்புமிக்க 3 மிச்செலின் கீ சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே ஹோட்டலாக தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. இது சொகுசு வாழ்க்கையின் அதிசிறப்பு என்ற அதன் நற்பெயரை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Resplendent Ceylon இன் தலைவர் மலிக் ஜே. பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், “எமது மூன்று உல்லாச விடுதிகளும் மிச்செலின் கீ சிறப்புகளால் அங்கீகரிக்கப்பட்டதைக் கண்டு நாம் பெருமைப்படுகிறோம். மூன்று கீ சிறப்பினைக் கொண்ட ஒரே இலங்கையின் ஹோட்டலாக Ceylon Tea Trails திகழ்வது அற்புதமாகும். இது இலங்கையின் சிறந்தவற்றை வெளிப்படுத்தும், அசாதாரணமான மற்றும் உண்மையான அனுபவங்களை வழங்குவதில் எங்களுடைய நம்பிக்கையை வலியுறுத்துகிறது. இந்த விருதுகள் எமது குழுக்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்கும், நாட்டின் உலகத் தரம் வாய்ந்த சொகுசு ஹோட்டல் என்ற நிலையை உயர்த்துவதற்கான எமது தொடர்ச்சியான நோக்கத்திற்கும் ஒரு சான்றாகும்.”
மிச்செலின் கீ சிறப்பு விருதுகள் அண்மையில் பாரிசில் நடைபெற்ற முதலாவது சர்வதேச விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்டன. மிச்செலின் கீ விருதுகள் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. அவை உலகின் சிறந்த தங்குமிடங்களை வெளிப்படுத்தும் வகையில் ஹோட்டல் உலகில் மிச்செலின் நட்சத்திரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகின்றன. இந்த சிறப்பு விருதுகள் பின்வரும் ஐந்து பொதுவான அளவுகோல்களில் சிறந்து விளங்கும் ஹோட்டல்களுக்கு வழங்கப்படுகின்றன: கட்டிடக் கலை மற்றும் உள்ளக வடிவமைப்பு, சேவை தரம், தனித்துவமும் பண்பும், பணத்திற்கேற்ற பெறுமதி மற்றும் உள்நாட்டு சூழலுக்கான பங்களிப்பு.
இந்த அங்கீகாரம் அனைத்து வகையான தங்குமிடங்களையும் உள்ளடக்கியது — நகரத்தின் தனித்துவமான தங்கும் விடுதிகள், மரபுக் கோட்டைகள், ரியோகன்கள், ஆடம்பர கூடாரங்கள் மேலும் தொலைதூர ஓய்வு தங்குமிடங்கள் வரை. சில கீ சிறப்புப் பெற்ற ஹோட்டல்களில் மிச்செலின் நட்சத்திர உணவகங்களும் இருக்கலாம், ஆனால் இந்த விருதுகள் முற்றிலும் தனித்தன்மையுடன் மதிப்பிடப்படுகின்றன; ஒவ்வொரு கீ சிறப்பு விருதும் தங்குமிட சிறப்பிற்கான உயர்வான தரத்தை பிரதிபலிக்கிறது.
மிக அரிதான மூன்று மிச்செலின் கீ சிறப்பு விருதுகள் ஒரு அற்புதமான தங்கும் அனுபவத்தை குறிக்கின்றன — இது உலகளாவிய விருந்தோம்பல் துறையில் மிக உயர்ந்த அளவுகோல் ஆகும், அங்கு வடிவமைப்பு, நிம்மதி மற்றும் சேவை ஆகியவை இணைந்து நினைவில் நீண்டநேரம் நிற்கும் அனுபவத்தை உருவாக்குகின்றன.
Resplendent Ceylon பற்றி
Resplendent Ceylon என்பது ரெலே & ஷாத்தோ (Relais & Châteaux) அமைப்பின் ஒரே இலங்கை அங்கத்துவ நிறுவனமாகும். இது சிறந்த அனுபவத்தைபெற விரும்பும் பயணிகளுக்கு இலங்கையின் முழுவதும் அமைந்துள்ள சிறிய, சொகுசு விடுதிகள் மூலம் ஒரு அற்புதமான பயண அனுபவத்தை வழங்குகிறது. ஒவ்வொரு உல்லாச விடுதியும் இயற்கை அழகும் சுற்றுச்சூழல் சிறப்பும் கொண்ட இடங்களில் அமைந்துள்ளன.
சிலோன் டீ ட்ரெயில்ஸ் (Ceylon Tea Trails), வைல்ட் கோஸ்ட் டெண்டட் லாட்ஜ் (Wild Coast Tented Lodge) மற்றும் கேப் வெலிகம (Cape Weligama) ஆகியவை உலகளாவிய அளவில் விருந்தோம்பலின் மேன்மைக்கும் தனித்துவமான விருந்தோம்பல் அனுபவங்களுக்கும் பெயர் பெற்ற ரெலே & ஷாத்தோ அமைப்பின் பெருமைக்குரிய அங்கத்தவராகும். Resplendent Ceylon என்பது உலகளாவிய அளவில் புகழ் பெற்றுத் திகழும் தேயிலை வர்த்தகநாமமான டில்மா சிலோன் டீ (Dilmah Ceylon Tea) நிறுவனத்தின் விருந்தோம்பல் பிரிவு ஆகும். இதன் தொகுப்பில் அஹு பே (Ahu Bay) மற்றும் கயாம் வெல்ல்நெஸ் (Kayaam Wellness) ஆகியவையும் அடங்கும்.
“இலக்குடன் கூடிய ஆடம்பரம் (Luxury with Purpose)” என்ற தத்துவத்தைக் கடைப்பிடித்து, ரெஸ்ப்லெண்டென்ட் சிலோன் இலங்கையின் வளமான பாரம்பரியம், பண்பாடு மற்றும் உயிரினப் பல்வகைப்பாட்டை கொண்டாடுகிறது; அதேசமயம் உள்நாட்டு சமூகங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகிறது.