விளையாட்டு
வைரலாகி வரும் விராட் கோலியின் பதிவு

Oct 16, 2025 - 01:57 PM -

0

வைரலாகி வரும் விராட் கோலியின் பதிவு

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று இரு பிரிவுகளாக புறப்பட்டது. தற்போது இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு சென்றடைந்தது. 

முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19ஆம் திகதி இடம்பெறுகிறது. 

இந்த தொடருடன் கோலி ஓய்வு அறிவிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி ரசிகர்களிடையே பேசும் பொருளாக உள்ளது. 

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றடைந்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்று வைத்துள்ளார். 

அதில் "நீங்கள் உண்மையிலேயே தோல்வி அடைவது, நீங்கள் விட்டுக்கொடுக்க முடிவு செய்யும் போதுதான்!" 

என பதிவிட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05