வணிகம்
JF Packaging அறிவித்துள்ள ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல், முதலீட்டாளர் அமர்வு 2025 ஒக்டோபர் 21 ல் இடம்பெறவுள்ளது

Oct 17, 2025 - 08:25 AM -

0

JF Packaging அறிவித்துள்ள ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல், முதலீட்டாளர் அமர்வு 2025 ஒக்டோபர் 21 ல் இடம்பெறவுள்ளது

நெகிழ்திறன் கொண்ட பொதியிடல் தீர்வுகளை வழங்குவதில் இலங்கையில் பிரசித்தி பெற்று விளங்குவதுடன், இத்தொழில்துறையில் புத்தாக்கங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ள ஒரு நிறுவனமான JF Packaging Limited, சாதாரண வாக்குரிமைப் பங்குகள் கொண்ட தனது ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல் நடவடிக்கை குறித்த உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. 

இது குறித்த முதலீட்டாளர் அமர்வு நிகழ்வானது 2025 ஒக்டோபர் 21 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் செயல்பாடுகள், வணிக கட்டமைப்பு, மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆழமான அறிவை சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நிறுவனத்தின் தலைமைத்துவ அணியுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பினை வழங்கி, நிகழ்நிலை வீடியோ ஏற்பாடு மூலமாக அமர்வில் இணைந்து கொள்வதற்கு உலகெங்கிலுமுள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தரப்பினரை இந்த அமர்வில் கலந்து கொண்டு, மிகவும் கவர்ச்சியான இந்த முதலீட்டு வாய்ப்பு குறித்த மதிப்புமிக்க அறிவைப் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனம் ஊக்குவிக்கின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05