வடக்கு
யாழ். போதனாவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு!

Oct 17, 2025 - 03:26 PM -

0

யாழ். போதனாவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு!

தூக்கில் தொங்கிய யுவதி ஒருவர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரத்தை சேர்ந்த நாகநாதன் கிருஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

குறித்த யுவதி மன விரக்தி காரணமாக கடந்த 14 ஆம் திகதி இரவு தூக்கிட்டுள்ளார். தூக்கில் இருந்து மீட்டு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

--

Comments
0

MOST READ