Oct 18, 2025 - 12:25 PM -
0
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் அளித்த ஒரு பேட்டியில், 'ரோகித் சர்மா, விராட் கோலியை ஒவ்வொரு போட்டியிலும் மதிப்பிடுவது சரியானதாக இருக்காது. அவர்கள் விளையாட ஆரம்பித்தவுடன் அவர்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்வோம்.
ஆனால் அது அணியில் இடத்தை உறுதி செய்வதற்கான தகுதி தேர்வாக இருக்காது அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர்கள் ஓட்டங்களை குவிக்காவிட்டால் நீக்கப்படுவார்கள் என்றோ, அதே நேரத்தில் அவுஸ்திரேலிய தொடரில் 3 சதங்கள் அடித்தால் 2027 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்றோ அர்த்தம் கிடையாது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவையாக இருந்த போது அவர்கள் ஓய்வு பெறுவதாக தானாகவே தெரிவித்தனர். அவர்களது முடிவை நாங்கள் மதித்தோம் என அகார்கர் தெரிவித்தார்.

