Oct 18, 2025 - 09:41 PM -
0
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் விசாரணை செய்ய அதன் விமான சேவைகள் நிறுவனம் மூன்று உயர் மட்டக் குழுக்களை நியமித்துள்ளது.
இந்நிலையில், டாக்கா விமான நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீப்பரவல் ஏற்பட்டது.
விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..
தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

