Oct 19, 2025 - 10:37 AM -
0
இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று (19) ஆரம்பமாகிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ரோகித் 8 ஓட்டங்களிலும் விராட் கோலி ஓட்டங்கள் எதுவும் எடுக்கமாலும் இந்திய அணி தலைவர் கில் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது தடைபட்டுள்ளது. 11.5 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துள்ளது. ஷ்ரேயஸ் 6 ஓட்டங்களையும் அடித்தும், அக்சர் 7 ஓட்டங்களையும் அடித்தும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
பல மாதங்களுக்கு பின் விளையாடிய விராட் கோலி, ரோகித் சர்மா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

