Oct 19, 2025 - 04:00 PM -
0
பாரிஸில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் விளைவாக, அருங்காட்சியகம் தற்போது மூடப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் இன்று (19) காலை திறக்கப்பட்ட போது திருட்டு இடம்பெற்றதாக பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், என்ன திருடப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
232 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகம் 1793 இல் திறக்கப்பட்டது.
இதில் 16 ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் உட்பட பல உலகப் புகழ்பெற்ற பழங்கால கலைப்பொருட்கள் உள்ளன.
கடந்த ஆண்டு மட்டும், 8.7 மில்லியன் மக்கள், லூவ்ரே அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளதுடன், இது அந்த ஆண்டில் உலகிலேயே அதிகளவானோர் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாக பதிவானது.

