கிழக்கு
தீபாவளியை முன்னிட்டு களைகட்டும் மட்டக்களப்பு

Oct 19, 2025 - 04:41 PM -

0

தீபாவளியை முன்னிட்டு களைகட்டும் மட்டக்களப்பு

நாளை (20) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று (19) மட்டக்களப்புப் பகுதியில் மக்கள் உற்சாகத்துடன் ஆடை மற்றும் பிற பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர். 

குழந்தைகளிலிருந்து முதியோர்கள் வரை பலர் குடும்பத்தினருடன் கடைகள் நோக்கிச் சென்றனர். வணிக வளாகங்கள்,ஆடை அங்காடிகள் மற்றும் பரிசுப் பொருள் கடைகளில் அதிக நெரிசல் பதிவாகியுள்ளது. திருநாள் கொண்டாட்டத்திற்கான இனிப்புப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் அதிகமாக வாங்கப்பட்டன. 

வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இம்முறை அதிகமானோர் தீபாவெளியை கொண்டாட தயாராகின்றனர். 

மக்களின் உற்சாகமான பங்கேற்பால் மட்டக்களப்பில் தீபாவளி பண்டிகை சூழல் சிறப்பாக உருவாகியுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05