Oct 19, 2025 - 05:00 PM -
0
இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டக்வத் லூயிஸ் முறைப்படி அவுஸ்திரேலிய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பாடிய நிலையில், போட்டியின் 16.4 ஓவரில் மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டி 26 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கமைய இந்திய அணி 26 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் KL Rahul அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், Axar Patel 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Josh Hazlewood, Mitchell Owen மற்றும் Matthew Kuhnemann ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு டக்வத் லூயிஸ் முறைப்படி 26 ஓவர்களுக்கு 131 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 21.1 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகட்சமாக அணித்தலைவர் Mitchell Marsh 46 ஓட்டங்களையும், Josh Philippe 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

