மலையகம்
தீபாவளியை கொண்டாடுவதற்காக தயாராகி வரும் மலையக மக்கள்

Oct 19, 2025 - 06:10 PM -

0

தீபாவளியை கொண்டாடுவதற்காக தயாராகி வரும் மலையக மக்கள்

நரகாசுரனை அழித்து, இருள் நிறைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்காக, மலையகத்தில் வாழும் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். 

இதனையொட்டி, பெருமளவிலான மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நகரங்களில் பொருட்கள் கொள்முதல் செய்ய கூடியிருந்தனர். 

குறிப்பாக, ஹட்டன் நகரில் இன்று (19) காலை முதல் ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர். இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, பெருமளவிலான பொலிஸார் நகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

பெரும்பாலான மக்கள், சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்து, புத்தாடைகள், பூஜைப் பொருட்கள் மற்றும் இறந்தவர்களை நினைவுகூர தேவையான பொருட்களை வாங்குவதற்காக வருகை தந்திருந்தனர். 

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், இம்முறை தீபாவளித் திருநாளை மக்கள் கொண்டாட உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05