வடக்கு
விபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணித்த பேருந்து

Oct 19, 2025 - 06:25 PM -

0

விபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணித்த பேருந்து

இன்று (19) யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று ஆபத்தான முறையில் வீதியில் பயணித்ததால் பேருந்தில் பயணித்தவர்களும் வீதியில் பயணித்தவர்களும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

இது குறித்து மேலும் தெரிய வருகையில், 

குறித்த பேருந்து புதுக்காட்டுக்கும் பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதிச் சமிக்ஞைகளை பின்பற்றாது, மிகவும் வேகமாக பயணித்தது. இதன் போது அபாயகரமான திருப்பத்தில் சென்ற இரண்டு மகிழுந்துகளை (கார்கள்) முந்திச் சென்றது. 

குறித்த திருப்பத்தில் தொடர் வெள்ளைக்கோடு காணப்படும் நிலையில் அந்த சைகையை பொருட்படுத்தாமல் மிகவும் வேகமாக அந்தப் பேருந்து முழுமையாக வலது பக்கத்தால் முந்திச் சென்றது. 

அண்மைக் காலமாக இடம்பெறும் வீதி விபத்துகளால் பல மரணங்கள், அங்கவீனங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகின்றமை தொடர் கதையாகி உள்ளது. இதனால் வீதியில் பயணித்தவர்களும், அந்த பேருந்தில் பயணித்தவர்களும் அச்சத்தில் காணப்பட்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05