Oct 20, 2025 - 04:24 PM -
0
கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முற்பகை காரணமாக, 24 வயது மதிக்கத்தக்க கௌரிராஜன் கஜன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக, கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக, சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
--

