Oct 20, 2025 - 05:03 PM -
0
மன்னார் மாவட்ட இந்து மக்கள் சமய வழி பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று (20) தீபாவளி பண்டிகையை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.
அதற்கமைவாக தீபாவளி விசேட பூஜைகள் இன்று காலை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் குறித்த பூஜைகள் இடம்பெற்றது.
இதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேவேளை மாவட்டத்தின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தீபாவளி விசேட பூஜைகள் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
--

