உலகம்
நடுக்கடலில் தீப்பற்றிய எரிபொருள் கப்பல்

Oct 21, 2025 - 08:06 AM -

0

நடுக்கடலில் தீப்பற்றிய எரிபொருள் கப்பல்

யேமனில் உள்ள ஏடன் துறைமுகத்தை கெமரூன் நாட்டைச் சேர்ந்த எம்.வி.பால்கான் என்ற மசகு எண்ணெய் கப்பல் அடைந்துள்ளது. 

அங்கு மசகு எண்ணெயை இறக்குமதி செய்த பின்னர் மீண்டும் அந்த கப்பல் அங்கிருந்து ஜிபோட்டின் கடற்படை தளத்துக்கு சென்று கொண்டிருந்தது. 

அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 23 பேர் உட்பட ஏராளமானோர் பணியில் இருந்துள்ளனர். 

நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கப்பலில் தீப்பற்றியுள்ளது. 

அந்த தீயானது கப்பல் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. 

இதனால் மாலுமிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். 

இந்த சந்தர்ப்பத்தில் ஜிபோட்டின் கடற்படை பாதுகாப்பு குழுமத்தினர் விரைந்து வந்து கப்பலில் சிக்கித்தவித்த இந்திய மாலுமிகள் 23 பேர் உட்பட அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். 

கப்பலில் ஏற்பட்ட தீயையும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மீட்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் சிகிச்சைக்காக அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05