வடக்கு
யாழ் பொலிஸாரால் 29 பேர் கைது

Oct 21, 2025 - 04:19 PM -

0

யாழ் பொலிஸாரால் 29 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோத மதுபான போத்தல்கள் 45, அதனை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், 90 லீட்டர் கோடா, சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் . 

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், கைதானவர்களின் 11 பேர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05