Oct 21, 2025 - 06:59 PM -
0
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, 50 ஓவர்கள் முழுவதும் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி விளையாடிய முதல் போட்டி இன்று (21) டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் பதிவு செய்யப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
குறித்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை மாத்திரமே பந்து வீச பயன்படுத்தியது.
ஒரு ஒருநாள் போட்டியில் 44 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி விளையாடிய 03 சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளது, மேலும் அந்த போட்டிகள் அனைத்தும் இலங்கை அணியால் விளையாடப்பட்ட போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டிகள் 1996 இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டி, 1998 இல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மற்றும் 2004 இல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிளாகும்.
இந்நிலையில், இன்று பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றை மாற்றியது மற்றும் அனைத்து இன்னிங்ஸ்களும் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி விளையாடிய முதல் போட்டியாக மாறியது.
இந்தப் போட்டியில், பங்களாதேஷ் 07 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களை எடுத்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக, சௌமியா சர்க்கார் அதிகபட்சமாக 45 ஓட்டங்களையும், அணி தலைவர் மெஹிடி ஹசன் மிராஸ் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் எடுத்தார்.
பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக குடகேஷ் மோர்டி மூன்று விக்கெட்டுகளையும், அகில் ஹொசைன் மற்றும் அலிக் அதானஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

