Header Logo
Mogo Academy

வணிகம்
NDB வங்கியின் “Super Rates, Super Savings” குறுகிய கால நிலையான வைப்பு சலுகையுடன் உங்கள் சேமிப்பினை அதிகரியுங்கள்

Oct 22, 2025 - 12:27 PM -

0

NDB வங்கியின் “Super Rates, Super Savings” குறுகிய கால நிலையான வைப்பு சலுகையுடன் உங்கள் சேமிப்பினை அதிகரியுங்கள்
Mobitel inner

NDB வங்கியானது தனது பிரத்தியேக 100 மற்றும் 200 நாட்கள் நிலையான வைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக வருமானத்தையும் அவர்களின் சேமிப்பில் விரைவான வளர்ச்சியையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2025 வரை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு செயற்படவுள்ள இது, முன்னணி சந்தை சலுகைகளுக்கு இணையான சிறந்த நிலையான வைப்பு வீதங்களை வழங்கவுள்ளது. 

இதற்கிணங்க வாடிக்கையாளர்கள் தற்போது 100 நாட்களுக்கு 8% மற்றும் 200 நாட்களுக்கு 8.25% என்ற கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை அனுபவிக்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்திற்கான இரண்டு அதிக வருமான வாய்ப்புகளில் தமக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கச் செய்யும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. 

NDB வங்கியின் “சூப்பர் ரேட்ஸ், சூப்பர் சேவிங்ஸ்” [“Super Rates, Super Savings”] திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள்தமது நிதிகளை நம்பிக்கையுடன் பாதுகாத்து, குறுகிய முதலீட்டு காலத்திற்குள் விரைவான வருமானத்தை அனுபவிக்கலாம். இது இன்று மாறி வரும் நிதி சூழலில் நிலைத்தன்மை, திரவத்தன்மை மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வருமானங்களை நாடும் நபர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில்ஒன்றாகத் திகழும் NDB வங்கியானது, பாதுகாப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் வளர்ச்சியை இணைக்கும் பல்வேறு வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு தயாரிப்புகள் மூலம் தனது வாடிக்கையாளர்களை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறது. 

இன்றே உங்கள் நிதியைப் பாதுகாத்து, NDB இன் பிரத்தியேக 100 மற்றும் 200 நாட்கள் நிலையான வைப்பின் மூலம் உங்கள் பணம் வேகமாக வளர்வதை அவதானியுங்கள். மேலதிக தகவல்களுக்கு, உங்கள் அருகிலுள்ள NDB கிளைக்குச் செல்லவும் அல்லது 011 2 448 888 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும். 

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara