வடக்கு
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு!

Oct 22, 2025 - 01:55 PM -

0

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு!

இன்று (22) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறையானது திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து வைக்கப்பட்டது. 

நிகழ்வின் ஆரம்பத்தில், விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக நாடா வெட்டி உணவு அறை திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. 

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி WPT. கொஸ்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எஸ்.ஜயமால், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05