Header Logo

வடக்கு
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

Oct 24, 2025 - 11:24 AM -

0

பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்று (24) காலை 8:30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை, மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது. 

ஆனாலும் புதிய சந்தைக் கட்டடம் போதியி இடவசதிகளோ அல்லது போக்கு வரத்து வசதிகள் குறைந்தவையாகவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்ப்பதாகவும், நகரில் இருந்து மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொது மக்கள் சந்தையை நாடுவது குறைவு ஆகையால் எமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் பல தடவை போராட்டம் நடாத்தி நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் மகஜர்களை கையளித்திருந்தனர். 

வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய நகரசபை அமர்வின் போது நிபுனர்குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடுவெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. 

ஆனாலும் இது வரை வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றுப்படாத விடத்து மரக்கறி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து போராட்டத்தை நடாத்திவருகின்றனர். 

ஆனாலும் சில மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறிச் சந்தை தமக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title