Oct 25, 2025 - 03:44 PM -
0
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை 100க்கும் மேற்பட்ட ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற ஜோடிகளில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
இன்றைய (25) அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அவர்கள் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இதுவரை 19 ஒருநாள் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் - கங்குலி ஜோடி 26 போட்டிகளில் அவ்வாறு பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் உள்ள திலகரட்ன டில்ஷான் - குமார் சங்கக்கார ஜோடி 20 போட்டிகளில் பெற்றுள்ளது.
18 போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட இணைப்பாட்டத்தை பெற்று இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்த ரோஹித் சர்மா - தவான் ஜோடி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

