Oct 25, 2025 - 07:47 PM -
0
இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் லக்ஷிகா சுகந்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அவர் இந்தப் போட்டியை 13.98 வினாடிகளில் நிறைவு செய்தார்.
இந்தப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை இரண்டு இந்திய வீராங்கனைகள் வென்றனர்.
இதேவேளை இன்று நடைபெற்ற பெண்களுக்கான பறிதி வட்டம் எறிதல் போட்டியில் வினோதினி லக்மாலி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
43.01 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.
இது அவரது தனிப்பட்ட சிறந்த பெறுபேறு என்பது குறிப்பிடத்தக்கது.

