Oct 26, 2025 - 01:17 PM -
0
இந்திய ஒருநாள் தொடருக்கான புதிய உப தலைவர் ஸ்ரேயாஷ் ஐயர், குறைந்தது மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நேற்று (26) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் அலெக்ஸ் கேரியின் பிடியை எடுத்த நிலையில் காயமடைந்தார்.
இதனை அடுத்து அவர் குணமடைவதற்கு மூன்று வாரங்கள் ஓய்வில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ரஞ்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டிக்கு முன் அவர் உடற்தகுதி பெறுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
எனவே அவர் இந்த தொடரை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
30 வயதான ஐயர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் வீரராக உள்ளார்.
அவர் தனது முதுகுப் பிரச்சினைகள் காரணமாக ஆறு மாதங்கள் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறிது காலமாக அவர் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
ஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்களை எட்டுவதற்கு அவர் இன்னும் 83 ஓட்டங்களே பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

