Oct 26, 2025 - 07:59 PM -
0
இந்தியாவின் ராஞ்சியில் இன்று (26) நடைபெறும் தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஹர்ஷ கருணாதன தங்கப் பதக்கம் வென்றார்.
ஓட்டப்போட்டியை 1:51.96 நிமிடங்களில் முடித்து பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் சிறப்பம்சமாக நேபாளம், இந்தியாவை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றது.
நேபாள தடகள வீரர் 1:52.03 நிமிடங்களில் ஓட்டப்போட்டியை முடித்தார்.
இந்த போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்தினையே பெற்றது.

